தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ.. தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி. 

மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி. இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. 

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி கதாநாயகிகளுக்கு இருக்கும் ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு நம்ம டிடிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவர், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அவரது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் RAKITA RAKITA பாடலில் வரும் ‘அந்த 4 பேர இதுவரைக்கும் பார்த்ததில்லை நானும், எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம்’ என்ற வரிக்கு லிப் மூவ்மெண்ட் போட்டு வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். இதனை கண்ட நெட்டிசன்கள் ரொம்ப குஷியோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தனுஷ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DD LATEST DUBSMASH FOR DANUSH SONG


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->