தர்பார் வசூல் இழப்பீடு விவகாரத்தில், போராட்டக்குழு பின்வாங்கியதன் பின்னணி என்ன?..!  - Seithipunal
Seithipunal


பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து, ஏஜிஎஸ் குழுமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை படப்பிடிப்பு தளத்திலிருந்து தனியாக அழைத்து விசாரணை வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகர் விஜயிடம் சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நீடித்து வந்தது. நடிகர் விஜய்யை தொடர்ந்து அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமானவரித்துறை வாக்குமூலம் பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை குறித்து விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை,  அண்மையில் வெளியான பிகில் படம் 300 கோடி வசூலித்ததாக வெளியான தகவலை அடிப்படையாக கொண்டு, அந்த படத்தில் நடித்த நடிகர், தயாரிப்பாளர், பைனான்சியர் உள்ளிட்டவர்களுக்கு தொடர்புடைய 38 இடங்களான சென்னை மற்றும் மதுரையில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த சோதனையின் போது ஏராளமான சொத்துக்கள், ஆவணங்கள், பிராமிசரி நோட்டுகள், முன் தேதியிட்ட காசோலைகளை கைப்பற்றப்பட்டன. சென்னை மற்றும் மதுரையில் பைனான்சியர் தொடர்புடைய இடத்தில் ரூ.77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் சுமார் ரூ.300 கோடி அளவிலான வருமானம் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் உட்பட பலருக்கு கொடுத்த சம்பளம் தொடர்பான ஆய்வுகள் நடைபெறுகின்றன. 

இந்த நிலையில், இது தொடர்பான வருமான சோதனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இல்லத்தை முற்றுகையிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இவர்கள் தர்பார் திரைப்படம் தோல்வியடைந்து தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்றும், இழப்பீடு தொகையாக ரூ.25 கோடி முதலில் கேட்ட நிலையில், பின்னாளில் ரூ.65 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர். தற்போதைய வருமான வரிசோதனையில் அனைத்தையும் கவனித்து வந்த அதிகாரிகளின் கவனிப்பிற்கு பின்னர், இது தொடர்பான போராட்டம் திடீரென கைவிடப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு அன்புசெழியனிற்கு லைக்கா நிறுவனம் தர்பார் ரிலீஸ் உரிமையை சில காரணத்தால் தர மறுத்த மறைமுக கோபம், காழ்ப்புணர்ச்சி மற்றும் பிகில் வசூல் மறைத்ததை தர்பார் தோல்வியாக கணக்குக்காட்டி தூண்டுதல் ஏற்படுத்தி நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

darbar theater owners strike vapes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->