ரஜினியின் மகள் திருமணத்திற்கு தாமதமாக வந்த தனுஷ்! புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை! காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunalநடிகசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. கோச்சடையான், விஐபி2 போன்ற படங்களை இயக்கிய இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் இன்று பிப்ரவரி 11-ஆம் தேதி  நடைபெற்றது.

இந்தநிலையில் சவுந்தர்யா-விசாகன் திருமணம் நேற்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் எனும் நட்சத்திர ஓட்டலில் கோலாகாலமாக நடைபெற்றது. திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

செளந்தர்யாவின் திருமண வரவேற்பில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தாமதமாக பங்கேற்றார். ஆனாலும், குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளாமல், எப்பவும்போல சகஜமாக பேசாமல் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

அதற்கு காரணம் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாமாதமாக வந்ததாகவும், அந்த படத்திற்கான அவரது கெட்டப் வெளியே பரவி விடக்கூடாது என்பதற்காக  புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.


 

English Summary

danush late in rajini's daughter recepition


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal