பிரபல டான்ஸர் தூக்கிட்டு தற்கொலை.! சோகத்தில் மூழ்கிய திரைத்துறை.!! - Seithipunal
Seithipunal


சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகரும், பிரபல டான்ஸருமான பரத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நடிகர் ராகவா லாரன்ஸின் நடன குழுவில் டான்ஸராக இருந்தவர் பரத். இவர் தமிழில் வெளிவந்த மின்சாரக்கனவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பல பிரபலங்களும் இவர் நடன பயிற்சி கொடுத்துள்ளார். 

சென்னை விருகம்பாக்கத்தில் தனது நண்பர்களுடன் வசித்து வந்த பரத், நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரின் இறப்பால் ராகவா லாரன்ஸ் நடன குழுவினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

English Summary

dancer bharath suicide


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal