நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தாதாசாகெப் பால்கே விருது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவுக்கான 2020 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ் மொழிக்கான விருது பட்டியலில் அசுரன் படத்தில் நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது அளிக்கப்பட்டது. 

அதேபோல் பன்முகத் தன்மை வாய்ந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அஜித்திற்கு. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும், சிறந்த படத்திற்கான விருது TO LET படத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dadasaheb phalke award for rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->