D44-ன் அடுத்தகட்ட மாஸான அறிவிப்பால் குஷி.! தனுஷ் பட ரசிகர்களுக்கு உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


தனுஷின் 44-வது திரைப்படமான D44 என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா இணைந்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜூம் இந்த திரைப்படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார்.இந்த திரைப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த திரைப்படத்தில் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது. 

திரையுலகை மாற்றிய இரு நடிகைகள்.! நடிகையின் பகீர் பேட்டி.! - Seithipunal

முன்னதாக பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷ் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகள் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது. நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டில் நாளை தேதி வெளியாகும் என்று படக்குழு அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலையில் இருந்து தனுஷ் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பால் ரசிகர்கள் படுகுஷியாக இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

D44 mass update 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->