பல்வலி சிகிச்சைக்குச் சென்ற நடிகையின் முக அமைப்பு மாறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


பல் வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற கன்னட நடிகையின் முக அமைப்பு மாறியது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதி, பல் சிகிச்சைக்காக சென்று, அவரின் முகம் வீங்கி, முகத்தின் அமைப்பு முற்றிலும் மாறியுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெங்களூர் ஜேபி நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி. இவர் நடிகையாக ஒரு சில கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனை சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மருந்துக்குப் பதிலாக ஊசியை சொல்லிக்கொள்ளும்படி சொல்லியதாக தெரிகிறது. மருத்துவர்கள் சொன்ன அந்த ஊசியை சுவாதி செலுத்தி கொண்டார்.

பின்னர் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது. இதனால் கடந்த 20 நாட்களாக அவர் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார். 

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டபோது முகவீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது வரை சுவாதியின் முகம் வீக்கம் சரியாகவில்லை. இதனை அடுத்து மருத்துவர்கள் தனக்கு சரியான பதிலை சொல்வதில்லை என்று குற்றச்சாட்டை நடிகை சுவாதி முன்வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cruelty the change facial structure actress toothache treatment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->