டைட்டானிக் உள்ளிட்ட படங்களை தூக்கி சாப்பிட்ட அவெஞ்சர்ஸ்!! அவெஞ்சர்ஸ் எண்டு கேம் மூவியின் வசூல் சாதனை!!  - Seithipunal
Seithipunal


அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் ஒரே நாளில் ரூ.1403 கோடி வசூல் செய்துள்ளது. 

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மார்வல் சினிமா உலகத்தின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் மார்வெல் உலகின் சூப்பர் ஸ்டார்ஸ் அனைவரையும் ஒரே படத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்றி இருந்தனர். 

இந்நிலையில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இதற்கு தமிழ் திரை பிரபலன்களான விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் டப்பிங் செய்துள்ளனர். நேற்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து இந்த வார இறுதிக்குள் 3 ஆயிரம் கோடி வரையும், மொத்தமாக, 7 ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர். டைட்டானிக், ஜூராசிக் பார்க் மற்றும் அவதார் ஆகிய படங்களின் சாதனையை முறியடித்து, இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

collection of avengers movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->