பாடகி சின்மயி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! சின்மயி பரபரப்பு! - Seithipunal
Seithipunal



கடந்த சில மாதங்களுக்கு முன்  நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை metoo என்ற ஹாஸ்டேக் மூலம்  வெளியிட்டு வந்தனர்.

அவரை தொடர்ந்து நடிகை சின்மயியும், திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.

மேலும் பலரும் அதனை இப்பொழுதே கூறியிருக்கலாமே அதை ஏன் 14  வருடம் கழித்து இப்பொழுது கூறவேண்டும் என கேள்விகள் எழுப்பினர். இவர்களின் இந்த கேள்விக்கு, அப்போது எனக்கு தைரியமில்லை, தனி பெண்ணாக நான் என்ன செய்ய முடியும் என்று பதிலளித்திருந்தார்.

இதனையடுத்து, திரைத்துறையில் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதாக மீ-டூ மூலம் சின்மயி பதிவிட்டு வந்ததால், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். 



 

இந்தநிலையில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதற்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பெரிய சட்டப்போராட்டம் காத்திருப்பதாகவும், நீதி நிலவும் என நபுகிறேன் என சின்மயி இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinmayi case court order


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->