நடிகர் சங்க தேர்தல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு! விஷால், நாசர், கார்த்தி மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடி!  - Seithipunal
Seithipunal


நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல் ரத்து
செய்யப்படுவதாகவும் பெட்டியில் இருக்கும் வாக்குகள் செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வாக்காளர்கள் தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கத் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு நடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு ஜுன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலை ரத்து செய்யக்கரி ஏழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணத் தடை விதிக்கப்பட்டது. 

இதனிடையே நடிகர் சங்கத்தை நிர்வாகம் செய்ய பபதிவுத்துறை உதவி ஐஜி-யை நியமித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து, நடிகர்கள் நாசர் மற்றும் கார்த்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்குகள் மீது இன்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் நடந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மீண்டும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High Court verdict about nadigar sanga election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->