முருகதாஸின் இஷ்டத்திற்கு நீதிமன்றம் செயல்படுமா?.. கடுப்பான நீதிபதிகள்..!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் எங்களுக்கு வருமானம் தரவில்லை என்றும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி விநியோகிஸ்தர்கள் திடீர் போர்க்கொடி உயர்த்தவே, ஏ.ஆர்.முருகதாஸின் வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்று கூறி ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான மனுவில், நான் தர்பார் படத்தை இயக்கியுள்ளேன். இயக்குனர் பணியை தவிர்த்து, பிற பணியில் நான் எடுபடவில்லை. படத்தின் விநியோகம் தொடர்பாக நான் யாரிடமும் பணம் பெறவில்லை. 

இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதியன்று தேனாம்பேட்டை அலுவலங்கத்திற்கு வந்த 25 க்கும் மேற்பட்ட நபர்கள், தன்னை விநியோகிஸ்தர்கள் என்று கூறி அவதூறாக பேசி பிரச்சனை செய்துள்ளனர். இதனால் எனது அலுவலக ஊழியர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். இதனைப்போன்று சாலிகிராமத்தில் இருக்கும் எனது இல்லத்திற்கும் வருகை தந்த 15 பேர் வீட்டை முற்றுகையிட்டு கோசம் எழுப்பினர். 

இதனால் எனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின்னர் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பான நீதிமன்ற விசாரணை நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், மனுதாரரின் வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்த நேரத்தில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரரின் புகாருடைய அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும், வழக்கை மேற்படி நடத்த விரும்பவில்லை என்று காவல்துறயினருக்கு முருகதாஸ் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் " பாதுகாப்பை கேட்டு வழக்கு தொடுக்கும் நபர்கள், பதிலளிப்பது தொடர்பாக காவல்துறை மற்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிற்கும். 

காவல்துறை சார்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்படும் நிலயில், நடவடிக்கை வேண்டாம் என்று கூறி பாதுகாப்பு கேட்ட மனுவை முடித்துவைக்க கூறுவதற்கு, நீதிமன்றம் முருகதாஸின் விருப்பப்படி செயல்படவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளாரா? என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் இது தொடர்பான வழக்கும் முடித்துவைக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai court angrily raise question about AR murugadoss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->