பூமர் விக்ரமன்.. டிரண்டிங்கில் இடம்பிடிப்பு..! கலாய்த்து தள்ளும் நெட்டிசங்கள்.!
boomer vikraman trending
பிக் பாஸ் நிகழ்ச்சியில் செய்தியாளரும், அரசியல்வாதியுமான விக்ரமனின் நடவடிக்கை குறித்து நெட்டிசன்கள் பலரும் பூமர் விக்ரமன் என்று ட்ரெண்டிங்கில் பதிவு செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி துவங்கியது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஆப்-ல் 24 மணி நேரமும் பார்க்க முடியும்.
இதில் விக்ரமன் பல போட்டியாளர்களுக்கும் பிடிக்காத ஒருவராக இருந்து வருகின்றார். அவர் அசிம் குறித்து புறம் பேசுவதும், பிறருக்கு அறிவுரை வழங்குவதும் அதே நேரத்தில் மற்றவர்கள் அறிவுரை கூறினால் ஏற்றுக்கொள்ளாதவர்களுமாக இருந்து வருகிறார்.
இதனால், பார்வையாளர்கள் விக்ரமனை பார்த்து எரிச்சல் அடைகின்றனர். மேலும், சில இணையவாசிகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மீம்ஸ் தயாரித்து பூமர் விக்ரமன் என்ற ஹேஷ் டேக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, அசிமை பார்த்து பலரும் முரடன் என்று கூறி வந்த நிலையில் அவரது கண்ணோட்டம் தற்போது மாறி வரும் நிலையில் பூமர் விக்ரமன் என்ற ஹேஷ் டேக் டிரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.