விஜயை தற்கொலைக்கு தூண்டிய முக்கிய அரசியல் கட்சி தலைவர்.! வெளியான பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது தமிழக அரசியலில் பல விவாதங்களைக் கிளப்பியது. அப்போது, விஜய்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போதும், விஜய்க்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியானது விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, "ரஜினிக்கு சலுகை வழங்கியதை போல், விஜய்க்கு 24 மணி நேர அவகாசம் கூட வருமான வரித்துறை வழங்காதது ஏன்? விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என அழைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர் மத்தியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் மீது ஏதோ கோபம் உள்ளது.

அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று கூறி தற்கொலைக்கு சமமான செயலை செய்யும் அளவிற்கு அவரை கே.எஸ்.அழகிரி தூண்டுகிறார் என கூறி பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp ex minister radhakrishnan says about vijay and congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->