பிக்பாஸ் வனிதாவுக்கு ஜூன் 27-ல் திருமணம்.! மாப்பிள்ளை யார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


நடிகை வனிதா விஜயகுமார் தளபதி விஜய்யுடன் நடித்த சந்திரலேகா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் ஹிட்லர் பிரதர்ஸ், தேவி போன்ற படங்களில் அவர் நடித்திருப்பார். 2000 ஆம் ஆண்டு அவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். 

கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார். அப்பொழுது அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். 

பின்னர் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். தற்பொழுது வனிதா விஜயகுமார் என்ற யூடியூப் சேனல் ஒன்றை வைத்து நிர்வகித்து வருகின்றார். 

இந்த நிலையில் வனிதாவுக்கு பீட்டர் பால் என்பவரோடு மீண்டும் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது. இதனை கண்ட வனிதாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பீட்டர் பால் ஒரு இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss Vanitha got marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->