#சற்றுமுன் பாடகர் எஸ்.பி.பி., கவலைக்கிடம்! மருத்துவமனைக்கு நேரில் சென்ற பாரதிராஜா!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையானது கடந்த 14ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 

அவருடைய உடல்நிலை குணமாகி விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவே இந்த பின்னடைவுக்கு காரணம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சி பெற்று வரும் எஸ்.பி.பி.,யில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, எஸ்.பி.பி யை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் ஆலோசனை நடத்தினார்

இந்த நிலையில் எஸ்.பி.பி., அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அமைந்தகரை எம்.ஜி.எம்., மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது பதற்றமான சூழ்நிலை உருவாகியது. 

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அவருடைய மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள். மேலும் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனை வளாகத்தில் ஒரு சோகமான சூழ்நிலை நிலவி வருகிறது. மருத்துவமனை அமைந்துள்ள பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BHARATHIRAJA arrive to mgm hospital


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->