கருப்பு நிற புடவையில் செம்ம க்யூட்டாக இருக்கும் வினுஷா தேவி.! கருப்பு கண்ணம்மா அழகோ அழகு.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

இதில் கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துவந்தார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.

அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் அவருக்கு விஜய் டிவியின் மூலமாகத்தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ரோஷினி ஹரிப்ரியனுக்கு வெள்ளித்திரையில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி சமீபத்தில் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.

இத்தகைய நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை பிரபல மாடல் அழகி வினுஷா தேவி ரிப்லேஸ் செய்து வருகின்றார். தற்போது அவர் கருப்பு நிற புடவையில் வெளியிட்டுள்ள க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathi kannamma vinusha black saree


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->