வழக்கு தொடரலாம் என்று தோன்றியது., மறைமுகமாக ஜெய்பீம் படத்தை போட்டு தாக்கிய பிரபல இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிய ஜெய் பீம் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக, சாதிய வன்மத்துடன், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில், இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதற்கு, அந்த சமூக மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த படத்தில் சாதிய வன்மத்துடன் அமைக்கப்பட்ட அந்த காட்சியை நீக்கி, செய்த தவறை ஒப்புக்கொண்டு உள்ளனர். ஆனால், மன்னிப்பு கேட்காமல் காலம் தாழ்த்தவே விவகாரம் பூதகரமாகியது.

இதனையடுத்து, தெலுங்கை தாய் மொழியாக கொண்ட படத்தின் இயக்குனர் ஞானவேல் (கதையே திருட்டு கதை தானம்) நடிகர் சூர்யாவை விட்டுவிடுங்கள், இதற்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் தன முழு பொறுப்பு, மன்னித்து (வருத்தம்) கொள்ளுங்க என்று வன்னிய மக்களிடம் மண்டியிட்டார்.

இந்நிலையில், இயக்குனர் பாக்யராஜ் அவர்கள், "அண்மையில் வெளியாகும் படங்களை பார்க்கும் போது, வழக்கு தொடரலாம் என்று தோன்றியது., என்று மறைமுகமாக ஜெய்பீம் படத்தை போட்டு தாக்கி உள்ளார்.

இன்று சென்னையில் 'கடைசி காதல் கதை' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், "நோய்த்தொற்று பரவலுக்கு பின் தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.ஆனால், இப்போது சில திரைப்படங்களை பார்த்த பின், தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நாம் தவறான உதாரணம் உள்ள திரைப்படங்களை வரவேற்கிறோம் என்பதை நினைத்து பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. சொல்லப்போனால் பொதுநல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக உள்ளது" என்று இயக்குனர் பாக்யராஜ் பேசினார். 

அண்மையில் திட்டமிட்டு சத்திய வன்மத்தோடு ஒரு சமூத்தையே தவறாக சித்தரித்த திரைப்படம் என்றால் அது ஜெய்பீம் தான்., அதைத்தான் அவர் குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் அதிகம் பேசி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bagyaraj say about Tamil Cinema


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->