நடிகர் சங்க தேர்தல்! விஜய் வந்த வேளையில் நடைபெற்ற சோகமான நிகழ்வு! மனிதாபிமானம் கூட இல்லாத சினிமா அரசியலின் அவலம்!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க விஜய் வந்த வேளையில், அவர் வாக்களித்துவிட்டு வெளியே வர சரியான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கே ஒரு முதியவர் மயங்கி கிடந்துள்ளார். 

அப்போது எந்த காரில், எந்த நடிகர் வருவார் என ஆவலாக ஓடிய ஊடகங்களின் கேமராவின்  கண்களுக்கு இவர் தெரியவில்லை. அதேபோல பிரச்சாரத்தில் பரபரப்பாக இருந்த பலருக்கும் கூட தெரியவில்லை. ஒருவேளை கண்டுகொள்ள மனமில்லையோ என்னவோ? 

வயதான ஒருவர் மயங்கி கிடக்க... அருகே சென்று பார்த்தால் நடிகர் சங்க வாழ்நாள் உறுப்பினர் சேலம் சுந்தரம் என தெரிய வந்தது.. 88 வயதில் வாக்களிக்க முதியோர் இலலததில் இருந்து தனிநபராக பேருந்தில் வந்தவர், வெயிலின் கொடுமை தாங்காமல்  மயங்கி சுருண்டு விழுந்து கிடந்துள்ளார். 

உடனடியாக தேர்தலை சந்திக்கும் இரு அணியை சேர்ந்தவர்களுக்கும் தகவல் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி சுந்தரம் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ பரிசோதனை செய்துளர்கள். அவரது விருப்பத்தின் பேரில் போரூரில் உள்ள அவரது முதியோர் விடுதியில் கொண்டு பத்திரமாக சேர்க்க கூறியுள்ளார். மேற்கண்ட செயல்களை எல்லாம் செய்த நடிகர் அபி சரவணன் அவரை அவர் கூறிய அதே முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். 

நடிகர் சங்க தேர்ததலில் வாக்களித்துவிட்டு வரும்போதே, அதே வளாகத்தில் மயக்கமுற்ற நலிந்த மூத்த கலைஞரை பாதுகாக்க தவறியவர்கள் தான் தமிழ் சினிமாவின் காவலர்கள்..  நலிந்த கலைஞர்களுக்கு நல திட்ட உதவி என வாக்குதிறுதி அளித்த அணி வெற்றி கொண்டு உண்மையாகவே உதவினால் நலம் தான்.. 

மக்களுக்கான அரசியல்வாதிகள் தான் அப்படி என்றால் சினிமா அரசியவாதிகள் கூட அவர்களை விஞ்சி தான் உள்ளார்கள். கவனிக்க வேண்டிய ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லையே.. மனிதம் மறித்து போனதோ?! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bad experience to old member of nadigar sanga election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->