அயோக்யா விஷால் கூறுவது என்ன? பாலியல் வன்கொடுமைக்கு இது தான் தீர்வு?! அசத்தலாக பதிவு செய்த அயோக்யா!! - Seithipunal
Seithipunal


சமீபத்துல வெளியான படந்தான் அயோக்கியா. தெலுகுல டெம்பருங்குற் பேர்ல பிளாக் பாஸ்டர் மூவியா வளம் வந்த இந்த அயோக்கியா தமிழ்ல எப்டி இருக்குனு  தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல நிறைய பேரு தியேட்டர் பக்கம் போயிருப்பாங்க. 

இப்ப அந்த அயோக்யவோட ரிவியூவா ஷார்ட்டா பாப்போம். சின்ன வயசுலயே பெத்தவங்கள இழந்து சமூகத்துல அநாதையா நிக்கிற விஷால், ஆனந்தராஜோட பேச்சு கேட்டுகிட்டு சின்ன சின்ன திருட்டுகளை செஞ்சி ஆனந்தராஜுக்கு விசுவாசமா இருக்காரு. 

ஒருக்கட்டத்துல விஷால் போலீஸ்ல மாட்டிக்கவே, அப்ப ஸ்டேஷன் வர ஆனந்த்ராஜ் போலிஸ்கிட்ட பம்முறத பாத்த விஷாலுக்கு, "போலீஸ் தான் கெத்து"னு ஒரு மனப்பாண்மை வரது.

இதனால அவர் ஆநந்தராஜ்கிட்ட இருந்து விலகி படிச்சி போலீசா மாறிடுறாரூ . அங்கையும் லஞ்சம் வாங்கிட்டு ரொம்ப செல்பிஷா இருக்க விஷால்,

கடத்தல் காரரா  இருக்க பார்த்திபனோட ஏரியாக்கு ட்ரான்ஸ்பர்ல போறாரு. அங்க போய் பார்த்திபனுக்கு ஆதரவா இருக்க விஷாலுக்கு பார்த்திபன் காசவாரி இறைக்கிறாரு. இதுக்கு நடுல விஷாலுக்கு காதல் வருது. பார்த்திபன் அவரு கடத்த வேண்டிய பொண்ணுக்கு பதிலா ஹீரோயின கடத்த,

அப்ப உள்ள என்ட்ரி ஆயி பார்த்திபனை பகைச்சிக்கிறாரு விஷால். அதுக்கு பிறகு காப்பாத்தப்பட்ட ஹீரோயின் என் இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா நீ செல்பிஷா தான இருந்திருப்பனு பேசி விஷாலை இந்த பொண்ண காப்பாத்த சொல்லி சில வசனமெல்லாம் பேசுறாங்க. விஷால் மறுத்தாலும் வேற வழி இல்லாம செய்றாரு. 

அதுக்கு பிறகு அந்த பொண்ணுக்கு என்ன நடந்துச்சு? அந்த பொண்ண எப்படி காப்பாத்துறாரு?, வில்லனா இருந்த விஷால் ஹீரோவா மாறுறாரா? அபிடிங்குறது தான் கதை. 

தண்டனைகள் கடுமையாக்கப்படாதவரை தவறுகள் குறையாது அப்டிங்குற கருத்த முன்வைச்சி தான் படம் முடியுது. ஆக்ஷன்னாலே விஷாலுக்கு நல்லாவே வொர்க்கவுட்டாகும். அதனால் அவுட்புட் நல்ல வந்துருக்குனே சொல்லலாம். பார்த்திபன், கே எஸ் ரவிக்குமார் போன்ற அனுபவ நடிகர்கள் சிறப்பவே அவங்க நடிப்பை வெளிப்படுத்திருக்காங்க. மொத்தத்துல அயோக்கியா படம் இந்த காலக்கட்டத்தில எல்லோரும் பார்க்க வேண்டிய படம்னு சொன்னா மிகையாகாது.

English Summary

ayokya movie review in tamil


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal