அதிரடி ஆக்‌ஷன் கதையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்.!  - Seithipunal
Seithipunal


2013-ம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘ராஜா ராணி’ படத்திலேயே முத்திரை பதித்து  கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூலை அள்ளி குவித்தது.

அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லீ. தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, அட்லீ ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக தெரிகிறது.

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee directions in sharukh khan production


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->