சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹீரோவாகும் சன் டிவி பிரபலம்.! சீரியல் என்னாகும்.?!  - Seithipunal
Seithipunal


சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த அசீம் தற்போது முதல் முறையாக சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். சன் டிவியில் தொகுப்பாளராக நுழைந்த இவர் பிரியமானவள் சீரியல் மூலம் சீரியலில் அறிமுகமானார். பின்னர், விஜய் டிவியின் தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு போன்ற சீரியல்களில் அஸீமும் நடித்திருக்கிறார். 

பகல் நிலவு சீரியலில் அசீம் நடித்த பொழுது, அவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்திருந்தார். இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து, இவர்கள் இருவரும் இணைந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்தனர். 

இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாக பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் இது குறித்து எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தனர். பிக்பாஸ் போட்டியில் ஷிவானி கலந்து கொண்ட பொழுது அதில் அசீமை அனுப்ப நிறைய முயற்சிகள் நடைபெற்றது. 

ஆனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. சன் டிவியின் பூவே உனக்காக சீரியலில் அசீம் ஹீரோவாக நடித்து வருகிறார். இத்தகைய நிலையில், அவர் கல்லூரி காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் கதை ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 

இதில், அவருக்கு ஜோடியாக மாடல் நடிகை ஆலியா நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aseem in kollywood hero


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->