விழாமேடையில் அறிவுரை கேட்ட மகளுக்கு, அட்டகாசமான பதிலளித்து அசத்திய ஏ.ஆர். ரஹ்மான்.! - Seithipunal
Seithipunal


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி,ஏ.ஆர்.ரஹ்மான்க்கு    இசைக்காகவும், பாடலுக்காகவும்  இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று தந்த படம் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’. 

அப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதற்கான விழா மும்பை தாராவி பகுதியில் சமீபத்தில் நடைபெற்றது.  அதில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மூத்த மகள் கதிஜா ஆகியோர் கலந்துகொண்டு உரையாடல் நடத்தினர்.

அப்பொழுது  கதிஜா தனது தந்தை குறித்து  பேசுகையில் கூறியதாவது, எனது அப்பாவை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. அதற்கு காரணம் அவரோட உலகப் புகழ் மற்றும் இசையில்லை. அவர் எங்க மூன்று பேருக்கும் கற்பித்த நன்மதிப்புகளே நான் பெருமை கொள்வதற்கு காரணம்.

மேலும் அப்பா இரண்டு ஆஸ்கர் விருது வாங்கி பத்து வருஷம் ஆகிவிட்டது. ஆனாலும் அவர் கொஞ்சம் கூட மாறவில்லை.அதே ரஹ்மானாகத்தான் இருக்கார்.ஆனால் எங்கக் கூட அப்பா இருக்கும்  நேரம் மட்டுமே  குறைந்துள்ளது.

மேலும் அப்பா மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்வார்,.ஆனால் அதுகுறித்து அவர் எதுவும் கூறமாட்டார். மற்றவர்கள் கூறித்தான் எங்களுக்கு தெரியும். 

பின்னர், நாங்கள் எங்களோட வேலைகளுக்குப் போகப்போறோம், எங்களுக்கு நீங்கள் கொடுக்கிற அறிவுரை என்னவென்று கதிஜா ஏ.ஆர்.ரஹ்மானிடம்  கேட்டார். 

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ,‘நான் யாருக்கும் அறிவுரை கூறமாட்டேன்.. எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நான் உங்களுக்கு சொல்லித் தரவேண்டும் எனபதி உறுதியாக இருந்தேன்.. உங்கள் மனசு சொல்வதை கேளுங்கள் உங்கள் மனசு தான் உங்களுக்கான சிறந்த வழிகாட்டி,கடவுள் உங்களை வழிநடத்துவார் என தெரிவித்தார்.

English Summary

ar rahman adviced to daughter on stage


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal