தனது உடல் எடையை குறைத்தது இப்படித்தான்! ரகசியத்தை போட்டுடைத்த அனுஷ்கா!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் அருந்ததி படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

இவர் விஜய்,ரஜினி சூர்யா, ஆர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பு பெற்றார் .  இந்நிலையில் அனுஷ்கா ஆர்யாவுடன் இணைந்து  இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக தனது உடல்எடையை 20 கிலோ அதிகரித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் தனது உடல் எடையை குறைக்க முடியாமல் பெரிதும் அவதிபட்டார்.அதனை தொடர்ந்து பல முயற்சிகளுக்குப் பிறகு, தனது  உடல் எடையைக் குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத் தான் எடுத்த முயற்சிகளைத் குறித்து தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில் 'என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

இது குறித்து அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறையில் எற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, தூக்கம்,உணர்ச்சிகள் தொடர்பான அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது. நமக்கு இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்தப் புத்தகம் உங்களுக்கு வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

View this post on Instagram

Repost : The gap in the world of weight loss and disease that needs to be filled is LIFESTYLE.....learn how lifestyle is inexpensive and free and the least used when it comes to healing ..be it weight , disease , depression , relationships , career ....nutrition , movement , sleep , emotions and stress ...out lifestyle defines the choices we make and take and those that we should ....the world has enough of complication and treatment ....the world and humans and the soul is craving the need to heal .....with the beautiful , stunning , down to earth Anushka Shetty ...coming soon .... a book that will begin the journey of lifestyle and healing ... Per order links available on my FB Page ,TQ 🙏🏻

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on

English Summary

anushka tweet about weightloss


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal