விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை பார்த்த.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக்ஸ என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகிய கடைசி விவசாயி சமீபத்தில் ரிலீசானது. தற்போது இவரது நடிப்பில் மாமனிதன் படம் ரிலீஸாகி இருக்கின்றது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி லீட் ரோலில் நடிக்க சீனிராமசாமி இயக்கியுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் நடிகை காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். 

இந்த நிலையில், இந்த மாமனிதன் படத்தை பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், " இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் பார்த்தேன்! 
தொடர்ந்து தன் படங்கள் மூலம் உறவுகளின் உன்னதத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள்!." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss wishes To mamanidhan Movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->