இயக்குனர் விஜய் - அமலா பால் விவகாரத்திற்கு இந்த நடிகர் தான் காரணம்.! புலம்பும் இயக்குனர் விஜய் அப்பா.!! - Seithipunal
Seithipunal


சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கின.

மேலும், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு இயக்குனர் விஜய், ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 

சமீபத்தில் இயக்குனர் விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன், என் மகனுக்கு விவகாரத்திற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என பேட்டி ஒன்று கூறினார். விஜய்யும் அமலாபாலும் காதலிக்கும்போது திருமணத்துக்குப் பிறகு அமலாபால் நடிப்பதில்லை என முடிவு செய்திருந்தார்.

சில மாதங்கள் சொன்னதை செய்த அமலாபால், அதன்பிறகு விஜய் நடிக்க வேண்டாம் என கூறியும் கேட்கவில்லை. தனுஷின் தயாரிப்பில் அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் தான் காதல் திருமணம் விவாகரத்து வரை சென்றது என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amala paul divorce issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->