பிக்பாஸ் 3 ராஜா ராணி சீரியல் நடிகையா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி. இத்தொடருக்கென சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இதில் செம்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆலியா மானஷாவிற்கும், கார்த்திக்காக வரும் சஞ்சீவ்விற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது.

மேலும் இந்த தொடரில் ஜோடியாக நடித்ததை தொடர்ந்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து  நிஜ வாழ்க்கையிலும் ராஜா ராணியாக ஜோடி சேர உள்ளனர்.

இந்நிலையில், ஆலியா மானசா பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் இரண்டு பகுதிகள் முடிந்த நிலையில், 3 வது சீஸனின் முதல் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. விரைவிலேயே அதில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. 

அதில் மானசா பெயர் இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பப்படுவதாக தெரிகிறது. இருப்பினும் பிக்பாஸ் வந்தால் அதன் பிறகு பலரது இமேஜ் டாமாஜாகி விடுவதால், சிலர் என் இந்த வேலை என கவலைப்படுவதாகவும் தெரிகிறது. 

English Summary

alya manaza may participate in bigboss


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal