கர்ப்பமாக இருக்கும் ஆல்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து..! அதிர்ஷ்டவசமாக தப்பிய சம்பவம்..!  - Seithipunal
Seithipunal


மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரிச்சயமாகியிருந்த ஆல்யா மானசா இவர் ராஜா ராணி சீரியல் மூலம் பல ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றார்.

இதை தொடந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அவருடன் நடித்து வந்த சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன் பின், ரியல் லைஃப்பிலும் ஜோடிகளாகியினர்.

Image result for alya manasa seithipunal

தற்போது ஆலியா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். அண்மையில் இவரும் இவரது கணவர் சஞ்சீவ் சினிமா வட்டாரத்தில் இருக்கும் தனது நெருங்கிய நண்பர்களுடன் கோத்தகிரிக்கு டிரெக்கிங் சென்றுள்ளனர். அங்கு அனைவரும் மலை ஏற 7 மாதம் கர்ப்பமாக இருந்த ஆல்யாவால் ஏற முடியவில்லை, எனவே பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் கணவருடன் இருந்துள்ளார்.

பின் நேரம் ஆனதும் ஜீப்பில் வந்துள்ளார், ஆனால் பாதி வழியில் ஜீப் ரிப்பேர் ஆகியுள்ளது. அவர் சிக்கிக்கொண்ட இடமோ யானைகள் நடக்கும் பாதை. அவருடன் வந்தவர்களுடன் இந்த தகவல் வர உடனே இயக்குனர் பிரவீன் பென்னட் மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் திரவியம் இருவரும் தங்களது ஜீப்பில் வந்து ஆல்யா மற்றும் சஞ்சீவை மீட்டுள்ளனர்.  தற்போது அந்த வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alya manasa and sanjeev stuck on trip


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->