669 முறையில் உடலுறவு .! பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி சர்ச்சையில் சிக்கிய முன்னணி நிறுவனர்!! - Seithipunal
Seithipunal


உலக முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சீனாவைச் சேர்ந்த அலிபாபா குரூப் நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, இவர் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய பல கருத்துக்களால் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

ஜாக் மா  கடந்த மாதம், தனது நிறுவன ஊழியர்களுக்கு '996' என்ற கணக்கில் அயராது உழைக்க வேண்டும் என கூறினார்.அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரம் 6 நாள்கள் உழைக்க வேண்டுமென்று தனது நிறுவன பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

மேலும் அவர்  ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைப்பது ஆசீர்வாதத்துக்குரிய ஒன்று என்றும் கூறினார். இந்நிலையில் வாரம் ஒன்றிற்கு 72 மணி நேரம் பணிபுரியவேண்டும் என்ற அவரது கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜாக் மா மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். சமீபத்தில் அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. அப்பொழுது  102 ஊழியர்களின் திருமண நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் தனது நிறுவன பணியாளர்கள் 669  என்ற கணக்கில் உடலுறவு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதாவது அனைவரும் 6 நாள், 6 முறை தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் நிறுவனதில் நன்கு உழைக்க முடியும், வாழ்க்கையை சீராக எடுத்து செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் திருமணமே ஒரு தயாரிப்பு நிகழ்ச்சி எனவும், குழந்தைகள்தான் ஒரிஜினல் தயாரிப்பு, எனவும் கூறியுள்ளார்.இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

English Summary

alibaba company owner make controversy about sex


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal