மனுஷன் வேற லெவல்ல இருக்காரு.. ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் மிரட்டலான தோற்றம்..!  - Seithipunal
Seithipunal


திரை துறையில் நடிக்க வரும் பல பேர் வந்த தடம் தெரியாமல் சென்று விடுவார்கள். ஆனால், எத்தனை வருடங்கள் சென்றாலும் தான் பெற்ற புகழையும், பெயரையும் அழியாமல் இன்றுவரை கொடிகட்டி பறக்கும் பலரும் இருந்து வருகிறார்கள். 

அந்த வகையில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் என்று இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் ஹீரோவாக இருந்த நேரத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். எப்பொழுதும் அவருக்கென ரசிகர் பட்டாளமே இருந்தது. 

இதை தொடர்ந்து, தற்போது அவர் முக்கியத்துவம் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் அவரின் நடிப்பில் குருச்சேத்திரா, ஹீரோ, கொலைகாரன் படங்கள் வெளியாகியது. 

தற்போது 16 ம் நூற்றாண்டில் கடற்படை தளபதியாக விளங்கிய குஞ்சலி மரைக்காயர் வரலாற்று படத்தில் ஆனந்தன் என்னும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். 

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் இந்த படத்தில் மோகன் லால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க ரூ 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்படுகிறது. தற்போது அர்ஜூனுடைய தோற்றம் பற்றிய போஸ்டர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

akshan king arjun new movie poster


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->