வலிமைக்கு லீவு கொடுத்துட்டு அஜித் போய் இருக்க இடம் இதானா.!? சர்ப்ரைஸி விசிட்.!  - Seithipunal
Seithipunal


தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை படம் குறித்த அப்டேட் வெகுவாக காத்திருக்கின்றனர். ஆனால், படக்குழுவினர் அதனை கண்டு கொள்ளாமல் தங்களது வெவ்வேறு படங்கள் குறித்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தல ரசிகர்கள் யாரிடம் அப்டேட் கேட்பது என்று கூட தெரியாமல் முதல்வர் வரை இந்த பிரச்சினையை கொண்டு சேர்த்தனர். 

வெறிபிடித்து அலையும் தல ரசிகர்கள்.! முதல்வரிடம் செய்த சேட்டை., அப்செட்டில்  அஜித்.! - Seithipunal

கொரோனா பிரச்சினைகள் காரணமாக நடிகர் அஜித் வலிமை படக்குழுவிடம் காலதாமதமாக படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று தெரிவித்து விட்டதாகவும் ஒரு தகவல் கசிந்தது. இந்நிலையில், அஜீத் தனது நண்பர்களுடன் இணைந்து வாரநாசி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. 

ரசிகர்களுக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்த 'தல அஜித்'.! வைரலாகும் வீடியோ.! -  Seithipunal

அவர் இந்த சுற்றுப்பயணத்தில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். வாரணாசியில் மிகவும் பிரபலமான ஸ்வீட் கடை ஒன்றுக்கு அஜித் சென்று இருக்கின்றார். அப்பொழுது அவர் தொப்பி மற்றும் முக கவசம் அணிந்து இருந்ததால் அவரை கடைக்காரர்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. 

வெறிபிடித்து அலையும் தல ரசிகர்கள்.! முதல்வரிடம் செய்த சேட்டை., அப்செட்டில்  அஜித்.! - Seithipunal

சாப்பிடுவதற்காக அஜித் தனது முக கவசத்தை அகற்றிய போது கடைக்காரர் அவரை அஜித் என்பதை கண்டறிந்துள்ளார். பின்னர், கடையின் வெளியே நின்று அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த கடை உரிமையாளர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அஜித் கடைக்கு வெளியே நின்று சாப்பிட்ட எளிமை தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith varanasi tour photo


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->