ரசிகர்களுடன் சாலையில் அமர்ந்து தல அஜித் செய்த செயல்! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராவும், தனக்கென கோடிக்கணக்கில் ரசிகர்  பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'விஸ்வாசம்' வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் அடுத்ததாக தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 59வது படத்தில்  நடிக்கிறார். அஜித் சமீபகாலமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருகிறார். அவ்வப்போது அவர் பயிற்சி எடுக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கத்தில் தல அஜித்தை பார்த்த ரசிகர்கள் சிலர், நாங்கள் உங்களை  பார்ப்பதற்காக 5 மணி நேரமாக காத்து கொண்டிருக்கிறோம் உங்களுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் என்று மிகவும் அன்புடன் கேட்டுக்கொண்டனர்.

ரசிகர்கள் வேண்டுகோளுக்காக வேண்டுகோளுக்கு இனங்க அவர்களுடன்  நடு ரோட்டில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார் நடிகர் அஜித். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith taking photo with fans in road


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->