அஜித்தையே பதறவைத்த கடிதம்! பொது அறிவிப்பை வெளியிட்டார் அஜித்!  - Seithipunal
Seithipunal


சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து நடிகர் அஜித் வக்கீல் மூலம் பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

"நடிகர் அஜித் குமார் அவர்களின் சட்ட ஆலோசகர்கள் நாங்கள். (இனிமேல் அவர் எங்கள் கட்சி காரராக கருதப்படுகிறார்) மேலும் இந்த நோட்டீசை அவரது அறிவுறுத்தலின் பேரில் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம். 

மார்ச் 6 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரபூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. அந்த கடிதம் அஜித் குமார் அவர்களின் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும் அவரது போலி கையொப்பத்தை இணைத்து இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியளிக்கிறது.

அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன எனவும் திட்டவட்டமாக தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார். 

அஜித் குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில் தனக்கு எந்த ஒரு சமூக ஊடக கணக்குகளும் இல்லை என்றும் சமூக ஊடகங்களின் எந்த ஒரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தை கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை அறிவித்துள்ளார். 

அஜித்குமார் கீழ்க்கண்டவற்றை மீண்டும் அறிவித்த விரும்புகிறார். 

* அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை 
* அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை 
* சமூக ஊடகங்களின் எந்த ஒரு கருத்தையும் மற்றும் எந்த ஒரு ரசிகர்       பக்கத்தையும் அவர் ஆதரிக்கவில்லை
* மீண்டும் சமூக ஊடகங்களில் பெறப் போவதாக கூறி வந்த இந்த                  போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை 

இறுதியாக தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியை கண்டு பிடிப்பதற்கு தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு விரும்புகிறார்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith kumar sent lawyer notice for fake letter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->