அஜித் இப்படியும் செய்வாரா?! சென்னை கோவளத்தில் நடந்த உண்மை சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வெளியான தகவல்!  - Seithipunal
Seithipunal


பெருமைக்காக இல்லை உண்மையில் என் அனுபவம் என தொடங்குகிறது இந்த செய்தி, அனுபவப்பட்டவர் பகிர்ந்த செய்தி அப்படியே உங்களுக்காக, " 2001 என நினைக்கிறேன், சென்னை கோவளத்தில் இருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டலின் வி ஐ பி டிரைவர் ஒருவர். ஒரு முறை ரத்தன் டாட்டாவின் வளர்ப்பு மகனை ஏர்போர்டில் இறக்கிவிட்டு இரவு 1 மணிக்கு ஹோட்டல் பக்கம் நெருங்கினார்.

அப்போது ஒரு குடிகாரன் பஜாஜ் M80 ல் போதையில் விழுந்து மயங்கிகிடந்தான். டிரைவர் காரை நிறுத்தி எழுப்ப முயன்றார். யார் என தெரிந்து கொள்ள பாக்கெட்டில் தேடி பார்க்க குவாட்டர் பாட்டில் இருந்தது. எதிரே ஒரு கார் வந்தது நின்றது காரில் இருந்து இறங்கி அந்த மனிதரும் வந்து எழுப்பினார். 

அவன் எழவே இல்லை இதை பார்த்து கொண்டிருந்த அந்த மனிதரின் மனைவி அங்கிருக்கும் ஒரு புளிய மரத்து அடியில் இருக்கும் ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரம் இருவரும் எழுப்பியும் எழாததால் அந்த மனிதர் டிரைவரிடம், "ஒரு 10 நிமிடம் மேடம்" என அவர் மனைவியிடம் சொல்ல சொன்னார். 

டிரைவர் சொன்னவுடன் அந்த மேடம் பரவாயில்லை நீங்க பாருங்க என சொன்னார். இருவரின் முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது. பிறகு அந்த மனிதர் டிரைவர் சட்டை பையில் ரூபாய் 500 வைத்து தயவு செய்து இவரை மருத்துவமனைக்கு கூட்டி போங்க என சொல்லிவிட்டு கிளம்பினார். அவர் அந்த டிரைவருடன், குடிகாரனை காப்பாற்ற செலவழித்த நேரம் சுமார் 45 நிமிடம். அந்த நல்ல மனிதர் வேறு யாரும் இல்லை, நம்ம அஜித் சார், கல்லில் மீது உட்கார்ந்துருந்த மேடம் ஷாலினி தான். அந்த டிரைவர் வேறு யாருமில்லை நான் தான். 

இப்போது அவரும் வளர்ந்து விட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு நானும் ஒரு விருந்தாளியாக போனேன். அங்கிருப்பவர்கள் எனக்கு சல்யூட் அடிக்கும் அளவுக்கு நானும் வளர்ந்துவிட்டேன்" என முடிக்கிறார் பெயரை வெளியிட விரும்பாத மற்றொரு நல்ல மனிதரும்... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after some years one person sharing his experience with actor ajith


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->