அம்மா மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.. விஷால் பல பெண்களை ஏமாற்றி உள்ளார்.! பிரபல நடிகையால் திடீர் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு உள்ளது என்று சர்ச்சை கருத்தை கூறியதோடு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில், விஷால் குறித்து சர்ச்சை கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். இதை நிரூபிக்க முடியும். இல்லை என்று விஷால் நிரூபிக்க முடியுமா? விஷால் நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு கேட்டு வருகிறார். 

விஷாலுக்கு ஓட்டு போடுவதற்கு முன்னால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். விஷால் மிகப்பெரிய ஏமாற்றவாதி. அவருக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்தப் பெண்ணை ஏமாற்ற வில்லை என்பதை நிரூபித்துக் காட்டட்டும். 

என் அம்மாவின் மீதும் எனது தொழிலின் மீது சத்தியமிட்டு செல்கிறேன். நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னை கொன்றாலும் சரி. அப்போது நான் சொல்வேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர் தான் என்று பதிவு செய்துள்ளார்.

English Summary

actress sri reddy says actor vishal


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal