பாகுபலி ராஜமாதாவாக முதலில் நடிக்க இருந்தது இவரா?! ராஜமவுலி சுவாரஸ்ய தகவல்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மாபெரும் சூப்பர் ஹிட் திரைப்படம் என்றால் அது பாகுபலி தான். இந்தப்படம் முதல் பகுதி சிறப்பான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பகுதியும் எடுக்கப்பட்டது. படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் அதன் பின்னர் மிகப்பெரிய புகழும், படவாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தது. 

இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்திற்கு முன், பாகுபலி படத்திற்கு பின் என்று நினைத்து பார்க்கும் அளவிற்கு மிகப் பெரிய புகழ் பெற்றார். பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் ராஜமௌலி பிரம்மாண்ட இயக்குனராக பார்க்கப்பட்டார். மேலும், இதில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். 

இதில், முதலில் நடிக்க இருந்தது நடிகை ஸ்ரீதேவி தானாம். இது குறித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமவுலி, ஸ்ரீதேவிக்கு பாகுபலி படத்தில் நடிக்க கோரிக்கை வைத்தபோது சம்பளம் அதிகமாக கேட்டதாகவும், அதனால்தான் அந்த படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முடியவில்லை." என்றும் அவர் கூறியிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sri devi could be act on bahubali movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->