அடேங்கப்பா, இந்த வயதிலும் இப்படியா? அம்மா நடிகை சரண்யாவின் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர் ஏறக்குறைய 8  ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகை சரண்யா மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். மேலும் அவர் பெருமளவில் கதாநாயகர்களின் அம்மாவாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலம் அடைந்துள்ளார். மேலும் அவருக்கெனவேஏராளமான ரசிகர் பட்டாளமும் உருவானது.

நடிகை சரண்யா அஜித், ஜீவா, விஜய் சேதுபதி, விமல், உதயநிதி, தனுஷ், விஷால், சூர்யா,  சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் 50 வயதை கடந்துள்ள இவர்  தற்பொழுது பிரபல அட்டைப் படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். அழகிய இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பிரபலங்களின் அம்மாவாக நடித்த சரண்யாவா இது என வியப்பில் மூழ்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress saranya latest photo leaked


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->