இணையத்தை கலக்கும் சமந்தா.! நயந்தாராவுக்கே கிடைக்காத அதிர்ஷ்டம்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்ற சமந்தா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சென்னை பல்லாவரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 

திருமணத்திற்குப் பின்னர் கூட நடிகை சமந்தா தொடர்ந்து தனது கெரியரில் சாதித்து வருகின்றார். முன்பைவிட தற்பொழுது அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிக்க துவங்கி இருக்கின்றார்.

சத்குருவிடம் தஞ்சமடைந்த சமந்தா.! இல்லறத்துக்கு குட்பையா.?! - Seithipunal

அதுமட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு தான் கவர்ச்சிக்கு தயார் என்று மறைமுகமாக கூறி வருகின்றார். 

இத்தகைய சூழலில், அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ஹிட்டடித்த இருந்த ஃபேமிலி மேன் தொடரின் இரண்டாவது பாகத்தில் நடிக்கின்ற சமந்தா, அதற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். 

வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் இந்த சீரியஸ் ஒளிபரப்பாக இருக்கின்றது. இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் தளத்தில் அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருந்தது. அதில், சமந்தாவுக்கு என்று தனி எமோஜியையும் ட்விட்டரில் அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் சமந்தா வில்லி கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress samantha emoji viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->