ரவுடி பேபி நடித்த படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால்., சம்பளத்தை வாங்க மறுப்பு.!! ஆனந்த கண்ணீரில் மூழ்ங்கிய தயாரிப்பாளர்.!! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலமாக மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி தமிழ் நாட்டின் இளைஞர்கள் மற்றும் கேரள இளைஞர்களின் மனதை கட்டி போட்டவர் சாய்பல்லவி. 

இந்த திரைப்படத்திற்கு பின்னர் தமிழ்., தெலுங்கு மற்றும் மலையாள படங்கள் இவர் வசம் குவியவே., மூன்று மொழிகளிலும் நடிக்க துவங்கினர். தமிழில் தியா., தனுஷுடன் மாரி-2 படங்களில் நடித்துள்ளார். 

இதற்கு அடுத்த படியாக சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வரும் இவர்., தெலுங்கு திரையுலகில் இயக்குனர் ஹனுராகவபுடி இயக்கத்தில் நடிகர் ஷர்வானத் நடிப்பில் வெளியான "படி படி லேச்சு மனசு" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 

இந்த படமானது சில நாட்களுக்கு முன்னதாக வெளியான நிலையில்., படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் ரூ.22 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டிருந்த நிலையில், ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்தது. 

இதனால் தயாரிப்பாளர்கள்., விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில்., படத்தின் தயாரிப்பாளர் படத்தின் சம்பள தொகையை படப்பிடிப்பின் போதே முன்பணமாக வழங்கிய நிலையில்., மீதமுள்ள ரூ.40 இலட்சத்தை வழங்க முன்வந்துள்ளார். 

அந்த சமயத்தில் நடிகை சாய்பல்லவி., படத்தில் ஏற்கவே நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஆகவே எனக்கு இந்த தொகை வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனை அறிந்த தெலுங்கு திரையுலகினர் அவரை பாராட்டி வருகின்றனர்.  
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress sai pallavi gives her salary to producer due to loss


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal