சமந்தா வில்லியென்றால் ஹீரோயின் யார்.?! தளபதி 67 குறித்து வெளியான சூப்பர் தகவல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.

இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். 

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் வில்லியாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து அப்போ ஹீரோயின் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சமந்தா வில்லியாக நடிக்கும் நிலையில் பிரியங்கா அருள் மோகனன் ஹீரோயினாக நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress priyanka arul mohanan in thalapathy 67 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->