கவர்ச்சி காட்டினால் தப்பா? சிவகார்த்திகேயன் பட நடிகையின் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழில் டாக்டர், டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்திருக்கிறார். 

இவர் நடித்த படங்கள் அனைத்திலுமே எந்தவிதமான கிளாமரும் காட்டாமல் அடக்க, ஒடுக்கமாக உடையணிந்து இருப்பார். சமூக வலைதளங்களில் கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சி காட்டாமல் தான் போட்டோ ஷூட் நடத்தப்பட்டிருக்கும். 

இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ப்ரியங்கா அருள் மோகன் கிளாமர் உடை அணிவது குறித்த ஒரு கேள்விக்கு, "அது அவர்களது தனிப்பட்ட விஷயம். கிளாமர் காட்டினால் தவறான செயல் என்று அர்த்தம் இல்லை. 

கொஞ்சம் உடல் தெரிகிற மாதிரி உடை அணிந்தால் கூட உடனே அவர்கள் பற்றி அவதூறு பேசக்கூடாது. அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம்." என்று பக்குவமாக பேசியுள்ளார்.

நெட்டிசன்கள் பலரும் நடிகைகளை தரக்குறைவாக விமர்சித்து வரும் நிலையில், அவர்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமான பதில் இது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress priyanka arul mohanan about glamour dress


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->