நயன்தாராவின் இடத்தை அடுத்ததாக பிடிக்கப்போகும் நடிகை இவர் தானாம்.!  - Seithipunal
Seithipunal


போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது வரை அந்த காதல் நீடித்து வருகிறது.

இறுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகியது. படம் வெளியான சில நாட்களில் இவர்களது திருமணம் குறித்த தகவல்களும் வெளியாகின. 

விக்னேஷ்- நயன் ஜோடி  பல வருடங்களாக காதலித்த நிலையில், இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், அந்த திருமணம் நேற்று நடந்தது. இவர்களது திருமணத்திற்கு பின் நயன்தாரா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில், அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நயன்தாராவுக்கு அடுத்ததாக அதிக சம்பளம் பெறும் நடிகை பூஜா ஹெக்டே தான். எனவே, நயன்தாராவின் இடத்தை பிடிக்கப்போகும் நடிகை அவர் தான் என்று கோலிவுட்டில் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Pooja Hegde may Replace nayanthara


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->