சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த நயன்தாரா.. ரசிகர்கள் உற்சாகம்.. தொழிலாளர்கள் நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. 

இதனால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்கு வெளியே வரக்கூடாது என்றும், தொழிற்சாலைகள் இயங்க கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. 

மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், அன்றாடம் பணி செய்து பிழைத்து வரும் குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், திரைத்துறையில் பெப்சி ஊழியர்கள் அன்றாட ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். 

இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் திரைத்துரைத்துறை சார்ந்த நடிகர்களும், நடிகைகளும், தயாரிப்பாளர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வரும் நிலையில், நடிகை நயன்தாரா தமிழ்நாடு சினிமா தொழிலாளர்களின் அமைப்பான ஃபெப்சிக்கு ரூ.20 இலட்சம் நிதியுதவி செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Nayanthara donate fund for cinema Pepsi worker


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->