தமிழ்க்கடவுள் கசக்கின்றது.. தமிழர்களின் ஓட்டு இனிக்கின்றதா.?! மறைமுகமாக திமுகவை விளாசிய தமிழ் நடிகை.!  - Seithipunal
Seithipunal


கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் இந்து கடவுள் முருகனை மிகவும் ஆபாசமாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகை மாளவிகா அவினாஷ் இதுகுறித்து தனது கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

அவர் வெளியிட்ட வீடியோவில், " அனைவருக்கும் வணக்கம்.! கந்தசஷ்டி குறித்து நான் பேச போகிறேன். ஏதோ கருப்பர் கூட்டம் என்று கூறுகிறார்கள், இவர்கள் யார் இந்து கடவுள்களை திட்டுவதற்கு? கருப்பசாமியை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம், சிவனின் அவதாரமாக அவரை நாங்கள் பார்க்கிறோம். சிவன் கருப்பு தான். அவர் பையன் முருகன் என்ன வெள்ளைக்காரனா? 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் வந்தது கழுத்தில் கத்தியை வைத்து இந்து கடவுள்களை எல்லாம் விமர்சித்தனர். நேரடியாக மதம் மாறுகிறாயா அல்லது கொலை செய்யவா என்று கேட்டனர். 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் வந்தது நயமாகப் பேசி அவர்கள் அனைவரையும் மதமாற்றம் செய்தார்கள். 

பலருடைய முற்போக்கு சிந்தனை, நாத்திகம் இவையெல்லாம் இந்துக் கடவுள்களுக்கு மட்டும்தானா? ஜிஹாத் குறித்து ஏதாவது ஒரு வீடியோவை போடலாமே? இந்துக்கள் மட்டும் ஏமாளிகளா? இதெல்லாம் யாருக்காக செய்கிறீர்கள்? 

முற்போக்கு சிந்தனை என்று நீங்கள் கூறினால் நான் ஏற்கமாட்டேன். எல்லாம் ஓட்டுக்காக ஆட்சியை பிடிக்க, இந்த வேலை நடக்கிறது. 70 ஆண்டுகளாக இதைத்தான் செய்தீர்கள். உங்கள் ஆட்சி காலத்திலேயே ஜாதியை ஒழிக்க வில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் இந்துக்களை திட்டினால் ஓட்டு விழுந்துவிடும். அதானே, உங்கள் அரசியல். உங்களை சொல்லி குற்றமில்லை. ஓட்டு போடுபவர்களை தான் கூற வேண்டும். 

தமிழர்களின் ஓட்டு வேண்டும். ஆனால், அவர்கள் வணங்கும் கடவுள்கள் வேண்டாம். இனிமேலாவது தமிழர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். என முருகனை வேண்டுகிறேன். நாட்டிலுள்ள இந்துக்களே கொஞ்சமாவது விழித்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகள் நம்மை கேவலப்படுத்தியவர்கள், அந்த அரசியல்வாதிகளை நாம் எதிர்ப்போம். தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress malavika angry about karuppar koottam video 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->