நடிகை கஸ்தூரியின் பதிவுகளுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!! மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!!  - Seithipunal
Seithipunal


நடிகை கஸ்தூரி சில நாட்களாகவே அரசியல், சமுதாய விஷயங்கள் என ஈடுபட்டு கொண்டிருக்கிறார். மேலும், சாதிய ரீதியான சில விஷயங்களுக்கும், அவ்வப்போது கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளார். 

சென்னை-கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற்ற, ஐபிஎல் கிரிக்கெட் குறித்து நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில் எம்ஜிஆரின் பாடலை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தது பலருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க தூண்டியது.

அந்த பாடலில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை லதா, இதுகுறித்து, நடிகர் கஸ்தூரியை, "காதல் காட்சிகள் அந்த காலத்தில் மிகவும் கண்ணியமாக படமாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நடிகை கஸ்தூரி நடித்த பல காட்சிகள் பற்றி நான் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதில்லை.

பெண்ணியம் பற்றி பேசி வரும் கஸ்தூரி இப்படி நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது. இது எம்ஜிஆர் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயலில் மீண்டும் அவர் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என அவர் எச்சரித்தார்.

இதை தொடர்ந்து, நடிகை கஸ்தூரி, "எம்ஜிஆர் நடித்த காதல் காட்சியை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இருப்பினும் பிறர் மனம் புண்படும்படி பேசியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress latha warning to kasthuri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->