நடிகையர் திலகம், படம் போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில், கீர்த்தி சுரேஷ்! - Seithipunal
Seithipunal


நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ சூப்பர் ஹிட்டானது.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நடிக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று படக்குழு தரப்பில் தெரிவித்துள்ளனர். முக்கியமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

English Summary

actress keerthi suresh in 20th movie


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal