பிக் பாஸில் தொலைந்த பிரபலம் சந்தானம் படத்தில் இணைந்தார்..! - Seithipunal
Seithipunal


திரையுலகில் பல சாதனைகளை படைத்தது, வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகம் ஆகி, விட முயற்சியால் இன்று கதாநாயகனாக வளர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 

இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான தில்லுக்கு துட்டு2, மற்றும் A1 படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் டிக்கிலோனா என்ற புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நட்பே துணை கதாநாயகி அனேகா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ், பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்தும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.

மேலும் இந்த படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயருமான ஹர்பஜன் சிங் இந்த படத்தில் நடிக்கிறார். 

இதை தொடர்ந்து இந்த படத்தில் நடிகை மதுமிதா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முதலில் டிக்கிலோனா படத்தில் கமிட்டாகி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress join with santhanam movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->