தளபதி 63 : பெண்கள் கால்பந்து அணியின் கேப்டன் இந்த நடிகை தான்! - Seithipunal
Seithipunal


அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63. இதன் படப்பிடிப்பு 2 மாதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு பயிற்சிகள் எடுத்து, நடித்து வருகிறார் இந்துஜா.

ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

actress indhuja join in vijay movie


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal