கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் இந்த நேரத்தில் இவர்களை போல இருங்கள்.! 96 குட்டி ஜானு ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. காதலர்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தில், அறிமுக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்திற்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. இந்தப்படம் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக அனைவரும் கொண்டாடினார்கள்.

மேலும் 96 படத்தில் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷான் என்ற பெண் நடித்திருந்தார். மேலும் ராம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் நடித்திருந்தார். மேலும் த்ரிஷா அளவிற்கு கெளரி கிஷான் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பேசப்பட்டது. 96 படத்தில் ஜானுவாக நடித்த கெளரி கிஷான் மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை கௌரி கிஷன் தனது ட்வீட்டர் பக்கத்தில், 96 பட புகைப்படத்தை பகிர்ந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் இந்த நேரத்தில் ராம் மற்றும் ஜானு போல இருங்கள் என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress gouri tweet about corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->