ஐந்தாவது திருமணம் செய்த நடிகை.. 12 நாட்களில் இப்படியா.?! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


டந்த சில வாரங்களுக்கு முன் உலகளவில் அனைவராலும் பேசப்பட்ட செய்தி தான் பிரபல நடிகை பமீலா ஆண்டர்சனின் ஐந்தாவது திருமணம். அவர் ஜான் பீட்டர்ஸ் என்பவரை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 

மாலிபுவின் ஒரு பகுதியில் இருவருக்கும் நெருக்கமான சில நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.  இவர் திருமணம் செய்துகொண்டவர் திரைப்பட தயாரிப்பாளரான ஜானுக்கு 74 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இருவருக்கும் திருமணம் முடிந்து வெறும் 12 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தற்போது இருவரும், அவர்களது இந்த திருமண பந்தத்திலிருந்து பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அந்த நடிகை பேட்டியில் கூறியுள்ளதாவது, "எங்கள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் அன்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு நடுவில் ஒருவருக்கொருவர் என்ன எதிர்பார்க்கிறோம் என மீண்டும் பரிசீலிக்க தற்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்துள்ளார். இவர்களது இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress divorced her 5th husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->