ப்பா.. அந்த மலையாள நடிகைக்கு 6 வருடமா விஷால் செய்த உதவி.! குவியும் பாராட்டு.!  - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள நடிகை ஷார்மிளா அறிமுகமான முதல் படத்திலேயே அதிக அளவில் ஹிட் ஆகினார். அந்த திரைப்படத்தில் ஷார்மிளா மோகன்லாலுக்கு கதாநாயகியாக நடித்திருப்பார். அதன் பின்னர் நிறைய மலையாள படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஷார்மிளா நடித்திருப்பார். 

இவர் நடிகர் கிஷோர் சத்யாவை முதன் முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணமும் தோல்வியில்தான் முடிந்தது. தற்போது, ஷர்மிளா நிறைய மலையாள படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த போது, "பட வாய்ப்பு இல்லாமல் ஒரு கட்டத்தில் மிகுந்த சிரமப்பட்டேன். அப்போது நடிகர் விஷால் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. கடந்த ஆறு வருடங்களாக என் மகனின் படிப்பு செலவுக்கு அவர் பண உதவி செய்து வருகிறார்." என்று தெரிவித்துள்ளார். 

இதை பார்த்த சினிமா ரசிகர்கள் பலரும் விஷாலின் இந்த குணத்தை பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Charmila about Vishal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->